தற்போது இலங்கையில் சைக்கிள் டயர்கள் மற்றும் டியுப்கள், மோட்டார் சைக்கிள் டயர்கள் மற்றும் டியுப்கள் மற்றும் முச்சக்கர வண்டி டயர்கள் மற்றும் டியுப்களின் சந்தை தலைவராக DSI டயர்கள் சாம்சன் ரப்பர் இண்டஸ்ட்ரீஸின் முதன்மை பிராண்டாகும், இது 1983 இல் DSI சாம்சன் குழுமத்தின் துணை நிறுவனமாக தொடங்கியது.
உலகின் புகழ்பெற்ற விற்பனையாளர்களான டெகாத்லான், டெஸ்கோ மற்றும் ஹால்ஃபோர்ட்ஸ்க்கு பொருட்கள் வழங்கும் இந்த பிராண்ட் ஆறு கண்டங்களில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பிராண்ட் ஃபைனான்ஸால் இலங்கையில் அதிகம் விரும்பப்பட்ட முதல் 125 பிராண்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ள DSI டயர்ஸ் பிராண்டுக்கு பல உள்ளூர் மற்றும் ஏற்றுமதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக தேசிய சேம்பர் ஆஃப் எக்ஸ்போர்ட்டர் விருதுகளிலும், ஜனாதிபதி ஏற்றுமதி விருது 2006 முதல் 2009 வரை தொடர்ச்சியாக ஏராளமான தங்கம் மற்றும் வெண்கல விருதுகளையும் வென்றுள்ளது.